திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் ஆனி தேரோட்டம் பஞ்சவாத்தியங்களோடு பக்தர்கள் அலைகடல் என திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்து மகிழ மிக சிறப்பாக நடைபெற்றது.
யானை காந்திமதி மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி நெல்லையப்பர் தேரின் முன்பாக கோவில் சார்பாக அசைந்தாடி செல்ல பக்தர்கள் தங்கள் குழந்தைகளை யானையிடம் ஆசி பெற்று பக்தர்கள் மகிழ்ந்தனர்.
திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என் அரசு அறிவித்ததால் சுற்றுப்புற மாவட்டத்தை சேர்ந்த மக்கள் ஞாயிற்றுக்கிழமை இரவே ரத வீதிகளில் திரண்டு இருந்தனர். அதிகாலையில் விநாயகர் முருகர் தேர்களையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இசை ,சங்கு, திருச்செல்வம், சொம்பு, பந்தம், தாளம் ட்ரம்பெட் ஆகிய பல வாத்தியங்கள் இசைக்கப்பட … பிரம்மாண்டமான தேர், அழகாய் அசைந்து வரும் யானை காந்திமதி , , பஞ்ச வாத்திய குழுவைச் சேர்ந்த 50 பேர்இசைக்க சிவ கானங்கள் என தேர் திருவிழா பக்தர்களின் பரவசத்தோடு கண்கொள்ளா காட்சியாக நிறைவுற்றது.
மருத்துவக் குழு மாநகராட்சி மருத்துவ குழுவினர் , ஓ ஆர் எஸ் கரைசல் உள்ளிட்ட முதலுதவி சிகிச்சை தேவையான மருந்துகள், இது தவிர தேரின் முன்பாக 108 ஆம்புலன்ஸ் வாகனமும் தயார் நிலையில் சென்று கொண்டிருந்தது.
தீயணைப்பு துறையைச் சார்ந்த தீயணைப்பு வீரர்கள் தேரோட்டம் முடியும் வரை துணை இருந்தனர். தென்பட்டு மலையாம் வீடு உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த தன்னார்வல பக்தர்கள் , சிந்து ஆலய பாதுகாப்பு குழு , நெல்லை காந்திமதி அம்மன் பக்தர்களின் பேரவை உள்ளிட்ட சார்பில் 200க்கும் மேற்பட்டோர் ரத வீதிகளில் வடம் பிடித்து இழுப்போருக்கும் , பக்தர்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்தனர்.
அம்மன் சன்னதி தெரு , பாரதியார் தெரு உள்ளிட்டவற்றில் இருபதுக்கும் மேற்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு நீர்மோர் இலவசமாக வழங்கப்பட்டது. விசிறிகள் அதிக அளவில் இலவசமாக கொடுக்கப்பட்டன. திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
கோவில் நிர்வாகம் ஆனி தேரோட்டம் முன்ஏற்பாடுகள் அனைத்தும் செய்து இருந்ததால் மிக சிறப்பாக ஆனி தேரோட்டம் இனிதே நடந்து நிறைவு பெற்றது.
Image source: news7tamil.live