- திருநெல்வேலி கூடங்குளத்தில் செட்டிகுளம் அனுவிஜய் நகரில் நேற்று இளைஞர்களுக்கான தொழில் பயிற்சி நடைபெற்றது.
- தொழிற்பயிற்சி நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு , தொழிலாளர் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
திருநெல்வேலி ராதாபுரம் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது .
மேலும் 6 அணு உலைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலா ஆயிரம் மெகாவாட் மின் திறன் கொண்ட வகையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இதனை மையப்படுத்தி கூடம் குளம் சுற்று வட்டார பகுதியிலும் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்படி இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்
இதை ஏற்றுக்கொண்டு அப்பகுதியில் ஐடிஐ டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முன்னுரிமை அளிப்பதில் அரசு ஏற்பாடு செய்தது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
செட்டிகுளம் அனுவிஜய் நகரில் தேர்வு செய்யப்பட்ட முதல் 25 இளைஞர்களுக்கான தொழில் பயிற்சிக்கான நேற்று நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு தொழிலாளர் துறை அமைச்சர் செய்த கணேசன் கலெக்டர் விஷ்ணு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் .
இதில் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு 28 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்பட்டு , பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு கூடங்குளம் அனுமின் நிலையத்தில் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் அளிக்கப்படும் .
அப்போது நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு பேசும்போது;
சி.டி பிரிவு வேலைவாய்ப்பு ஏற்படும்போது கூடங்குளம் சுற்றியுள்ள ராதாபுரம் தொகுதி மக்களுக்கு அந்த வேலையை வழங்க வேண்டும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி 2011ஆம் ஆம் ஆண்டு வரை வேலைகள் வழங்கப்பட்டது. அதன் பின் வழங்கப்படவில்லை எழுத்து தேர்வு நேர்முகத் தேர்வு இல்லாத தகுதியின் அடிப்படையின் கீழ் பணி வழங்க கூடங் குளம் நிர்வாக பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஞான திரவியம் எம். பி , மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி. எஸ். ஆர் ஜெகதீஷ் , கூடங்குளம் வளாக இயக்குனர் பிரேம்குமார், கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட இயக்குனர்கள் சுரேஷ், சின்ன வீரன் என பலர் கலந்து கொண்டனர்.
Image source: dailythanthi.com