- திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் குடிநீர் கோரி குவிந்த மனுக்கள்
- நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் பி. எம். சரவணன் தலைமை வகித்தார்
திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மக்களின் கோரிக்கை கான குறைநீர் கூட்டம் நடைபெற்றது . நடைபெற்ற கூட்டத்திற்கு மேயர் பி. எம் சரவணன் தலைமை வகிக்க , துணை மேயர் கே. ஆர். ராஜு மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயான பாதையினை அகலப்படுத்திடவும், மின்தகன மேடை அமைத்து தர கேட்டும் என். ஜி. ஓ. பி காலனி பகுதியில் உள்ள மக்கள் மனு அளித்தனர்.
51 வது வார்டு பகுதி திருநகர் சமுதாயக்கூடத்திற்கு கழிப்பறை வசதி செய்து தரவும், திருநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 2016 - 17 ஆம் ஆண்டில் அம்ரூத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பூங்காவில் புதிய மின்சார கேபிள் இணைப்பு வழங்கவும் , திருநகர் நலச் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
தச்சநல்லூர் மூன்றாவது வார்டில் உள்ள எட்டு தெருகளுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திட கேட்டு பாலாஜி அவென்யூ மக்கள் மன்றத்தின் சார்பில் மனு அளித்தனர்.
புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்கிடவும் பாளைமண்டலம் இந்திரா நகர் பொதுநகர் அளித்த மனுவில் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திடவும் மாமன்ற உறுப்பினர் சகாய ஜூலியட் மேரி அளித்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
எம் முகாமில் திருநெல்வேலி மண்டல தலைவர் எஸ் மகேஸ்வரி, தச்சை உதவி ஆணையர்(பொ) லெனின், செந்தில் மேலப்பாளையம் கதிஜா இக்லாம் பாசிலா, செயற்பொறியாளர் எல். கே பாஸ்கரன்,, மேலப்பாக்கம் மண்டல உதவியாளர் (பொ)ஐயப்பன் பாளையங்கோட்டை மண்டல உதவியாளர் ஜஹாங்கீர் பாஷா உதவி ஆணையாளர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Image source: instanews