செய்திக்குறிப்புகள்:
- நெல்லையில் வருகிற 17-ஆம் தேதி டி.என்.பி.எஸ். சி குரூப் 4 மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.
- திருநெல்வேலி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு வருகிற 24-ம் தேதி நடக்க உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக TNPSC (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்) குரூப் 4 தேர்வு வருகின்ற 24-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் இதற்கான மாதிரி தேர்வு நடப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலி டி.என்.பி. எஸ்.சி குரூப் 4 மாதிரி தேர்வு பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் வருகிற 17-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நெல்லை மாவட்டம் மைய நூலகம் மற்றும் நெல்லை சிவராஜ வேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் சார்பில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தத் தேர்வுக்கான நேரம்;
காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை.
வழிகாட்டுதல் ஊக்க உரை தேர்வு முடிந்த பின்னர் வழங்கப்பட உள்ளது
தேர்வில் வெற்றி காணும் முதல் எட்டு பேருக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன . மாதிரி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் 9626252500, 9626253300 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யுங்கள் என்று நெல்லை மாவட்டம் மைய உலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com