பாளையங்கோட்டை அழகியமன்னார் ராஜகோபாலசுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ராப்பத்து விழாவின் எட்டாம் நாளான நேற்று மாலை சத்யபாமா, ருக்மணி சமேதராய் ராஜகோபாலன் சிறப்பு அலங்காரத்தில் தோளுக்கினியானில் புறப்பட்டு சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளி வலம் வந்து மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சொர்க்க வாசல் வழியாக சென்று பெருமாளை தரிசித்தனர்.