நரிக்குடி வட்டரத்திலுள்ள மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி அரசு தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நரிக்குடி வட்டாரத்திலுள்ள 15 ஊராட்சிகளிலுள்ள 650 சுய உதவிக்குழுக்களில் உள்ள பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்திற்கு ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கும் வகையிலான ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்திடும் வகையில் அரசு தோட்டக்கலை பண்ணையிலிருந்து பப்பாளி, முருங்கை, பீர்க்கன், புடலை, கத்தரி, மற்றும் கீரை போன்ற செடிகள், விதைகள், கன்றுகள் அடங்கிய விதை தொகுப்பு வழங்கப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற இந்த விதைகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட திட்ட இயக்குனர் தெய்வேந்திரன் தலைமை தாங்கினார்.உதவி திட்ட அலுவலரான தங்கப்பாண்டியன் கலந்துகொண்டு சுய உதவிக்குழு பெண்களுக்கு விதைகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார். இதில் கலந்து கொண்ட சுயஉதவிக்குழு பெண்கள் ஆர்வமுடன் விதை தொகுப்பு மற்றும் செடிகள், கன்றுகளை பெற்றுச்சென்றனர்.