- திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழா.
- ஏழாம் திருநாளான நேற்று நடராஜர் வெள்ளை சாத்தி தரிசனம்.
திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் ஏழாம் திருநாளான நேற்று இரவு நடராஜர் வெள்ளை சாத்தி திருக்கோலத்தில் எழுந்தருளும் விழா நடைபெற்றது.
இதையொட்டி நேற்று இரவு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, வெள்ளை வஸ்திரம் மற்றும் வெள்ளை நிற பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் சாத்தி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து வெள்ளை சாத்தி கோலத்தில் திருக்கோவிலுக்குள் உள்ள பெரிய பிரகாரத்தில் நடராஜர் உலா வர, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Image source: Facebook.com