- துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள்.
- காலை 9.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை மின்தடை.
திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கல்லூர் மற்றும் சீதபற்பநல்லூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (17/03/2022) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மேற்கண்ட துணை மின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மின் தடை செய்யப்படும் என திருநெல்வேலி கிராமப்புற மின் விநியோக செயற்பொறியாளர் மற்றும் கல்லிடைக்குறிச்சி மின் விநியோக செயற்பொறியாளர் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
மேலக்கல்லூர், கீழக்கல்லூர், நடுக்கல்லூர், கோடகநல்லூர், பட்டன்கல்லூர், பழவூர், கொண்டாநகரம், சுத்தமல்லி, :சேரன்மகாதேவி, சங்கன்திரடு, சீதபற்பநல்லூர், புதூர், மாறாந்தை, உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாளாங்குறிச்சி, கீழக்கரும்புளியூத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகள்.
Image source: Facebook.com