- குறுக்குத்துறை கோவில் வருஷாபிஷேகம்.
- வைரக்கிரீடம், வைரவேல் தாங்கி திருநெல்வேலி எழுந்தருளிய சண்முகர்.
திருநெல்வேலி மாநகர தாமிரபரணி ஆற்றங்கரையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவுருமாமலை என்று சிறப்பித்து அழைக்கப்படும் குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமையப்பெற்றுள்ளது.
பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நேற்று காலை வருஷாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வள்ளி, தெய்வானை உடனுறை சண்முகப்பெருமான் புறப்பாடாகி திருநெல்வேலி டவுணுக்கு எழுந்தருளினார். அப்போது திருப்பணி முக்கில் வைத்து சண்முகருக்கு வைரக்கிரீடம், வைரவேல் சாத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து திருநெல்வேலி டவுண் ரத வீதிகளில் உலா வந்த சண்முகரை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
Image source: dailythanthi.com