திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆனித் திருவிழா தேரோட்டத்திற்கு தேர்களை தயார்படுத்தும் பணி தொடங்கியுள்ளது
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்களில் விழாக்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையப்பர் கோவிலில் மற்ற அனைத்து தொடர் பூஜைகள், விழாக்கள் நடைபெற்று வந்தாலும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா மிகப்பெரிய விழாவாக செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனிப் பெருந்திருவிழா வருகிற 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11ஆம் தேதி மிக சிறப்பாக தேரோட்டம் நடைபெறவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. இதற்காக பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை இணைந்து செய்து வருகிறது.
தேரோட்டத்தில் விநாயகர் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேர்களும் உலா வர தேரோட்டத்தை காணவும் தேரை வடம் பிடித்து இழுக்கவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ரத வீதிக்கு வருகை புரிவார்கள்.
ஆசியாவிலேயே அதிக எடை கொண்டதாகவும் தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேராக புகழ்பெற்ற தேர் , தேரோட்டத்திற்கு தயார்படுத்தும் பணி நேற்று தொடங்கியது
தேர் பாதுகாப்பு கருதியும் பக்தர்கள் தேரை வெளியே இருந்து பார்க்க வசதியாகவும் கண்ணாடி இலையால் மூடி வைக்கப்பட்டிருந்த அவற்றை நேற்று கோவில் ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர்.
Image source: Dailythanthi.com