செய்திக் குறிப்புகள்
- நெல்லை கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்
- களக்காட்டில் நடத்தப்பட்ட இந்த முகாமில் நகர்மன்ற தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார்
தானம் அளிப்பவர் இடும் தானத்திலே கொடுப்போரும் பெறுவோரும் ஒருசேர மகிழ்ச்சி பெற்றால் அந்த தானத்தில் பலன் உண்டு . அப்படி நாம் செய்யக்கூடிய , மனதை நிறைவு பெறக்கூடிய தானம் ரத்த தானம் மற்றும் கண் தானம். அதற்காக அரசு நிறைய முகாம் ஏற்பாடு செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி கொடுத்து வருகிறது. அதுபோலவே களக்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
நெல்லை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க நிதி உதவியுடன் கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை களக்காடு சுகம் மருத்துவமனையில் நடத்தியது.
களக்காடு நகர்மன்றத் தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்க, கிராம உதயம் ஆலோசனைக்குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகிக்க,
கிராம உதயம் மருத்துவத் துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார்.
அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் காயத்ரி தலைமையில் செவிலியர்கள் கண் பரிசோதனை செய்தனர் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் ராபின் நன்றி கூறினார். டாக்டர் ஷேக் அலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்தியாவில் கருவிழி பாதிப்பால் முழுவதும் பார்வையிழந்தவர்கள் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேர். இதில் 20,000 பேர் ஒவ்வோர் ஆண்டும் பார்வை இல்லாதோர் பட்டியலில் புதிதாகச் சேருகின்றனர். கவலை கரமான செய்தியை மனதில் கொண்டு, ஒவ்வொருவரும் தாம் இறந்த பிறகு கண்களை தானமாக கொடுப்பதற்கான ஏற்பாடு செய்க. நாம் இறந்த பிறகும் நம்மால் இரண்டு பேர் பார்வை கிடைத்து பயன்பெறுவர் எனும் மனம் நிறைவு பெறுக.
Image source: Dailythanthi.com