செய்திக் குறிப்புகள்
- ஜூன் 24 ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் அறிவிப்பு.
- திருநெல்வேலியில் நடக்கும் இந்த முகாமில் , வேலை வாய்ப்பு வேண்டுவோர் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பங்கேற்று பயன் பெறமுடியும்.
எதிர்கால கனவுகள் சுமந்து தம்முடைய திறமை முயற்சி கொண்டு படித்தும், பட்டம் பெற்ற இளைஞர்கள் வேலை தேடுவதிலும் பல சிரமங்கள் எடுக்கும் நிலைதனை பார்க்கின்றோம். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு அரசு மட்டுமன்றி தனியார் நிறுவனங்களும் உற்சாகத்துடன் வேலை வாய்ப்புகள் வழங்குகின்றன.
அதற்கான முகாம் பற்றி முக்கிய செய்தி குறிப்பு…
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் ஹரிபாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ..
திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் , வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை ஜூன் 24 ல் நடைபெற இருக்கிறது.
சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது
இம்முகாமில் பணி நியமனம் பெறும் பதிவுதாரர்கள் உடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டாது என்றும் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது கல்வி சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்று பயனடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
நல்ல தகுதியுள்ள திறமையுள்ள இளைஞர்கள் அதற்கான போதிய சம்பளம் அவர்கள் பெற்றால் தான், அவர்கள் செய்யும் சாதனை நம்முடைய இந்திய தொழில் வளர்ச்சி அடைந்து நாடு முன்னேற்றம் காணும். அதை விடுத்து நம் நாட்டு இளைஞர்களின் திறமைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பது ஏன்? என்ற கேள்விக்கு சிந்தனை பதிவாகவும் திருநெல்வேலி டுடே இந்தப் பதிவினை முன்வைக்கிறது.
Image source: Hindutamil.in