- மாசி விசாகம் நம்மாழ்வார் திருவுருவம் தாமிரபரணியில் கிடைத்த நாள்.
- நாளை தாமிரபரணியில் நம்மாழ்வார் தீர்த்தவாரி.
வைகாசி விசாகம் அன்று நம்மாழ்வார் அவதரித்த தினம் என்பது நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுபோல மாசி விசாகம் அன்று ஆழ்வார்திருநகரியில் உள்ள நம்மாழ்வார் திருவுருவம் தாமிரபரணியில் இருந்து கிடைத்த தினம் ஆகும்.
இதனை ஒட்டி ஆழ்வார்திருநகரி கோவிலில் மாசி மாதம் 13 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின் ஒன்பதாம் திருநாளில் நம்மாழ்வார் தேரோட்டமும், பதிமூன்றாம் திருநாளான மாசி விசாகம் அன்று தீர்த்தவாரியும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி விசாகம் நாளை 23/02/2022 வருவதை ஓட்டி, தாமிரபரணியில் நம்மாழ்வார் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.
Image source: Facebook.com