செய்திக்குறிப்புகள்:
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு.
நெல்லையில் இன்று காலை 8.00 மணி தொடங்கி 5 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 388 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 19022022 அன்று தேர்தல் நடைபெற்ற நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி, சங்கர் நகர் பேரூராட்சி, நாராணம்மாள்புரம் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்திலும், அம்பை, விக்கிரமசிங்கபுரம் நகராட்சிகள், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை அம்பை ஏ.வி.ஆர்.எம்.வி. அரசு மகளிர் பள்ளி வளாகத்திலும், களக்காடு நகராட்சி, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, திசையன்விளை பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாங்குநேரி நம்பி நகர் மெட்ரிக் பள்ளி வளாகத்திலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதுபோல சேரன்மாதேவி, கோபாலசமுத்திரம், மேலச்செவல், பத்தமடை, வீரவநல்லூர், முக்கூடல் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும், ஏர்வாடி, திருக்குறுங்குடி, பணகுடி, வள்ளியூர் பேரூராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கை வள்ளியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலும் இன்று காலை 8.00 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் இன்று உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட்டதில் வெற்றி பெற்றது யார் என்பது தெரிய வரும்.
Image source: dailythanthi.com