செய்திக்குறிப்புகள்:
22/02/2022 முதல் 28/02/2022 வரை அறிவியல் கண்காட்சி நடைபெறுகிறது.
காலை 10.30 மணி முதல் 5.30 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனைகள்" என்ற தலைப்பில் இன்று முதல் வரும் 28/02/2022 வரை கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் நாட்டின் அறிவியல் தொழில்நுட்பம், பாரம்பரியம், சுதந்திர இந்தியாவின் அறிவியல் கொள்கைகள், பசுமை, வெண்மை, நீல புரட்சிகள், நீர் திட்டங்கள், தொழில்மயமாக்கலும் கனரக தொழிற்சாலைகளும், தொழில்நுட்ப புரட்சி உள்ளிட்டவற்றில் அறிவியல் சாதனைகளை விளக்கும் வகையில் பேனல்கள் இடம் பெறுகிறது.
மேலும் இந்த கண்காட்சியில் தினமும் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்பு கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம் பெற உள்ளது. இதில் மாணவ, மாணவியர்களுடன் பொதுமக்களும் பங்குபெறலாம் எனவும் இந்த கண்காட்சியை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைவரும் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image source: Facebook.com