செய்திக்குறிப்புகள்:
கும்பப்பூ சாகுபடியில் நெல் விளைச்சல் அமோகம்.
நெல் கொள்முதல் விலை நூறு கிலோ ரூ.2015 ஆக உயர்வு.
கன்னியாகுமரி மாவட்டத்தில் வருடம் தோறும் கும்பப்பூ, கன்னிப்பூ என்ற இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் சுமார் 6500 ஹெக்டர் பரப்பளவில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு பருவ மழையும் விவசாயிகளுக்கு கை கொடுத்ததால், நெல் விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல் அறுவடை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் வைக்கோல் கொள்முதல் செய்யும் விலையும் உயர்ந்து, 100 கிலோ நெல்லுக்கு 2015 ரூபாயும், ஒரு ஏக்கர் வயல் பரப்பில் இருந்து கிடைக்கும் தரமான வைக்கோலுக்கு 5000 ரூபாயும் வழங்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.