- சிவகாசி மாநகராட்சி அந்தஸ்துடன் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை சந்தித்துள்ளது.
- பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சி வெற்றி.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி, திருத்தங்கல், ஆகிய 2 நகராட்சிகளையும் இணைத்து சிவகாசி மாநகராட்சியாக மாற்றி தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அரசாணை வெளியிட்டது. இதனை அடுத்து மொத்தம் 48 வார்டுகளை கொண்ட சிவகாசி மாநகராட்சி, மாநகராட்சி அந்தஸ்துடன் முதல் முறையாக உள்ளாட்சி தேர்தலை கடந்த 19/02/2022 அன்று சந்தித்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் மாலை அறிவிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி 48 வார்டுகளில் வெற்றி பெற்ற கட்சிகளின் விவரங்கள்:
தி.மு.க - 24
அ.தி.மு.க -11
காங்கிரஸ் - 6
ம.தி.மு.க -1
வி.சி.க - 1
பா.ஜ.க - 1
சுயேச்சை - 4
Image Source: Official site of Sivakasi Municipal Corporation