- கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது.
- 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில் தி.மு.க. 229 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 19/02/2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் மாலையில் அறிவிக்கப்பட்டன. அதன்படி நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள உள்ள 52 வார்டுகளில் தி.மு.க 24 வார்டுகளிலும், அ.தி.மு.க 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும், பா.ஜ.க 11 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும், மதிமுக1 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் உள்ள 828 வார்டுகளில் தி.மு.க. 229 வார்டுகளிலும், காங்கிரஸ் 163 வார்டுகளிலும், பா.ஜ.க. 168 வார்டுகளிலும், அ.தி.மு.க. 64 வார்டுகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு 42 வார்டுகளிலும், தே.மு.தி.க. 5 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்டு 2 வார்டுகளிலும், சுயேச்சைகள் 155 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.