25- 6- 2022 - சனிக்கிழமை கிருத்திகை விரதம்
கிருத்திகை நாள் அன்று கந்த சஷ்டி கவசம் படியுங்கள். எந்த பிணியையும் துயரத்தையும் போக்கக்கூடிய பதிகம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பையும் நலம் காக்க வேண்டி முருகப்பெருமானின் வேல் காக்க என தியானித்து பாடும் அற்புதமான பாடல் அன்றைய தினம் பாடி வாழ்க்கையில் வளம் பெருக. சுபீட்சம் அனைத்தும் நீர் பெருக.
26-6-2022 - ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம்
ஓம் சிவாய நமஹ எனும் திருநாமத்தை 108 முறை சொல்வது சிறப்பு .
திருநாமத்தை சொல்லும் போது முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி அமர்ந்து வடக்கு நோக்கி அமர்ந்து சிவபெருமானை மனதில் நிறுத்தி சொல்வது சிறப்பு.இதனால் ஏற்படும் தெய்வீக பலன் தம்பதியரின் மனதில் இருக்கும் குழப்பங்கள் தீரும் .ஒற்றுமை பலப்படும் .மனச்சுமைகள் குறையும். வாழ்வினில் என்று தம்பதியர் ஒற்றுமையோடு வாழ்வதற்கு பிரதோஷ வழிபாடு நிச்சயம் செய்யுங்கள்.
27- 6- 2022 - திங்கட்கிழமை சிவராத்திரி
நினைத்த பொழுது ,நினைக்கும் இடத்தில் , நாம் நினைத்தால் வருபவனா இறைவன்! அவன் பார்வை நம் மீது படவேண்டும் . பாவ கணக்கு கரைந்து புண்ணிய பலன்கள் யாவும் நாம் பெற்று, வாழ்வில் 'ஓம் நமச்சிவாயா ' எனும் நாமம் தனை நாம் மொழிந்து , சீரும் சிறப்புமாய் வாழ்வதற்கு சிவராத்திரியின் பொழுது சிவ நாமம் கூறி , நம்மால் முடிந்த திருப்பணிகள் அனைத்தும் நாம் செய்து , வாழ்வில் இனிது கண்டு மனிதப்பிறவியின் நிறைவு காண்போம்.
28-6-2022- செவ்வாய்க்கிழமை சர்வ அமாவாசை
முன்னோர்கள் அனைவரும் நம்மை தேடி வந்து ஆசிபுரிந்து வாழ்த்துகின்ற நாள்தான் மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை .
வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும், ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களைஅணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. பித்ருதோஷம்தான் ஏற்படும் என்பதை மனதால் உணர்ந்தால் போதும் நம்முடைய முன்னோர்களின் ஆசியும் தெய்வத்தின் ஆசியும் நிறைந்து இனிவரும் வாழ்க்கை நலமாகவே அமையும்.
('இந்த வார விரத தினங்கள்' எனும் சிறப்பு பதிவு ஒவ்வொரு வியாழன்தோறும் திருநெல்வேலி டுடே வில் படித்து பயன்பெறுங்கள்.)
Image source: Maalaimalar.com