- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் தொழுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாமில் கல்லூரி முதல்வர் பியூலா தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.
தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழையில் ஏற்படும் குருமணி என்று சொல்லப்படும் நோய்களாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் பாதிப்பு மட்டுமன்றி கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.
இதற்கான மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் பியூலா தலைமையில் தொழுநோய் ஒழிப்பு திட்ட இயக்குனர் அலர்சாந்தி கலந்து கொண்டு பேசினார்
வட்டார மருத்துவ அலுவலர் சரவண பிரகாஷ், கரிசல்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரமேஷ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், மருத்துவம் சாராமேற்பார்வையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர். உதவி பேராசிரியை ஜெப ஷீபா நன்றி கூறினார்.
Image source: tamil.getlokalapp.com