செய்திக்குறிப்புகள்:
- வரலாற்று சிறப்புமிக்க சிவாலய ஓட்டம்.
- ஒரே நாளில் 12 கோவில்களுக்கு ஓடியே சென்று பக்தர்கள் தரிசனம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி அன்று சிவாலய ஓட்டம் என்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடைபெறும். அன்று பத்மநாபபுரத்தை சுற்றியுள்ள பன்னிரெண்டு சிவாலயங்களை ஓரே நாளில் ஓடிச் சென்று பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.
சிவாலய ஓட்டத்திற்குரிய அந்த 12 திருக்கோவில்கள்:
- திருமலை மகாதேவர் கோவில்
- திக்குறிச்சி மகாதேவர் கோவில்
- திற்பரப்பு மகாதேவர் கோவில்
- திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
- பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
- திருப்பன்றிப்பாக்கம் சிவன் கோவில்
- கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
- மேலாங்கோடு சிவன் கோவில்
- திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
- திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
- திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
- திருநட்டாலம் சங்கர நாராயணர் கோவில்.
Image Source: kanyakumarians.com