- அய்யா வைகுண்டர் அவதார தின விழா.
- திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுவாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு வருகிற 04/03/2022 வெள்ளிக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும், நிறுவனங்கள் அனைத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் வங்கிகளுக்கு பொருந்தாது எனவும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் அடுத்து வரும் 12/03/2022 சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அறிவித்துள்ளார்.