நெல்லை மாவட்டம் விநாயகர் சதுர்த்தி தின விழாவை ஒட்டி விநாயகர் சிலைகள் அதிவேகமாக தயாரிக்கும் பணியில் நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31- 8 -2022 புதன்கிழமை நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
விநாயகர் சதுர்த்தி அன்று பெரிய விநாயகர் சிலைகள் சாலைகளில் பிரதிஷ்டை செய்வது வருடா வருடம் சிறப்பாக நடைபெறுகிறது. அதன் பின்பு விநாயகர் சிலைகளை எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வழக்கமாக நடந்து வருகிறது. இந்த வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது
நெல்லையில் இந்த வருடம் இந்து அமைப்புகள் மற்றும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது .
பாளையங்கோட்டை , சமாதானபுரம் கிருபா நகர், சீவலப்பேரி சாலை, மார்க்கெட் பகுதிகள் போன்ற இடங்களில் இரவு பகலாக விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி விரைவாக நடந்தேறி வருகின்றது .
ஒரு அடி உயரம் முதல் 9 அடி வரை உயரம் வரை உள்ள விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் குறைந்த பட்சம் 100 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 27 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. பொதுவழிபாட்டிற்காக பலர் போன மாதமே முன்பதிவு செய்துள்ளனர் .
சிவன், பார்வதி , விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்கள், வண்ணத்தில் மிக அழகாக வடிவமைத்து, பார்ப்பதற்கு பக்தர்களை கவரும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.
இங்கு செய்யப்படும் விநாயகர் சிலைகள் கேரளா மற்றும் திருச்சி , மதுரை , தென்காசி தூத்துக்குடி , திண்டுக்கல் ,கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com