செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
- அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 50 வது இடத்திற்குள் முன்னேற்றுவதே தன்னுடைய கனவு திட்டம் என்று புதிய துணைவேந்தர் சந்திரசேகர் அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 50 வந்து இடத்திற்குள் முன்னேற்றுவதே தன்னுடைய கனவு திட்டம் என்று புதிய துணைவேந்தர் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அகில இந்திய துணைவேந்தராக இருந்த பிச்சுமணி அவர்கள் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து புதிய துணைவேந்தராக யார் நியமிக்கப்படுவார் என்பது எதிர்பார்ப்பாக இருந்தது.
இப்பொழுது புதிய துணைவேந்தராக சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரசேகர் அவர்கள் முன்பு புவித்தொழில் நுட்ப ஆய்வு துறை தலைவராக இதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது .
பல்கலைக்கழகத்தில் புதிய துணை வேந்தராக சந்திரசேகர் பொறுப்பேற்கும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அப்பொழுது துணைவேந்தர் சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி ஏற்று இருக்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது . ஏற்கனவே 14 ஆண்டுகள் இந்த பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துணைத் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறேன் . பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன் என்று தெரிவித்தார்.
உலகம் போற்றும் அளவிற்கு பல மடங்கு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வேன். இப்பொழுது ஏ கிரேட்டில் உள்ள பல்கலைக்கழகத்தை ஏ**...கிரேடுக்கு உயர்த்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அகில இந்திய அளவில் தரவரிசை பட்டியலில் 89 ஆவது இடத்தில் இருந்த பல்கலைக்கழகம் தற்போது 80வது இடத்திற்கு வந்துள்ளது வரவேற்கத்தக்கது.
விரைவில் 50வது இடத்துக்குள் முன்னேற்றுவதே கனவு திட்டமாக வைத்துள்ளேன். நிச்சயம் அது நிறைவேறும் . அதற்கான மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, ஆராய்ச்சிகள், பல ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியீடு மற்றும் தேவையான ஆசிரியர்கள் அனைத்திலும் முக்கிய கவனம் எடுத்துக் கொள்ளப்படும்.
தற்போது உள்ள பாடத்திட்டம் மிகவும் நன்றாக இருக்கிறது . இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் இன்றைய அறிவியல் வளர்ச்சி பற்றிய ஆய்வு குறித்து புதிய பாடத்திட்டங்களால் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகமாகும் வகையில் வடிவமைக்கப்படும்.
நிதி ஆதாரம் பெருக்கவும் பல புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று சந்திரசேகர் தெரிவித்தார் . அவர் கூறும்போது பதிவாளர் (பொறுப்பு)அண்ணாதுரை உடன் இருந்தார்.
Image source: maalaimalar.com