- நெல்லை சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து உரைப்பது எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
- சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
நெல்லை மாவட்டம் அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரி மற்றும் சாரதா மகளிர் கல்வியியல் கல்லூரியில் சார்பில் தரமான கல்வியை மாணவர்களுக்கு எடுத்து உரைப்பது எனும் தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாரதா மகளிர் கல்லூரி மற்றும் ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
இந்த விழாவில் கல்லூரி துணை முதல்வர் கலாவதி வரவேற்புரை நிகழ்த்தினார். செயலர் யதிஷ்வரி சரவணாபவபிரியா அம்பா முன்னிலை வகித்தார் . கல்லூரி இயக்குனர் பேராசிரியர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்ற, கல்வி மேம்பாட்டு கேந்திரத்தின் தமிழ் மாநில தலைவர் இந்திராணி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் காந்தி கிராம பல்கலைக்கழகத்தின் லஷ்மி கல்வியியல் கல்லூரியின் பேராசிரியர் வின்சென்ட் ராஜசேகர் சிறப்புரை ஆற்றினார். விழாவின் முக்கிய நிகழ்வாக மகளிர் கல்வியியல் கல்லூரி இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்த பத்திரத்தை கல்லூரி செயலரிடமிருந்து சாரதா கல்வியல் கல்லூரி பேராசிரியர் சாருலதா பெற்றுக் கொண்டார். அடுத்து ஹயக்ரீவர் கல்வி நிறுவனம் தச்சநல்லூர் மற்றும் சாரதா மகளிர் கல்லூரிக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது . ராமநாதபுரம் சி.எஸ். ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர் ஆனந்த் நன்றி கூற விழா சிறப்பாக நடைபெற்றது.
Image source: maalaimalar.com