விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற நிலையில், வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் உள்ள மங்காபுரம் மேல்நிலைப்பள்ளி, திரு வி.க பிரைமரி பள்ளி, கான்வென்ட் பெண்கள் மேல்நிலை பள்ளி, சி.எம்.எஸ் மேல்நிலை பள்ளி, கம்மாபட்டி நடுநிலை பள்ளி, குருஞானசம்மந்தர் மேல்நிலை பள்ளி, ஆர்.சி பிரைமரி பள்ளி, நாகம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளிட்ட 11 வாக்குச்சாவடிகள் பதற்றமானைவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு சி.சி.டி.வி கேமராக்களை பொறுத்தவும், கூடுதல் காவலர்களை பணியில் நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.