தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளுக்கும் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் பதிவாகும் வாக்குகள் அண்ணா பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சாருஸ்ரீ நேற்று நேரில் பார்வையிட்டு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.