திருநெல்வேலி மாவட்டம் நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள அலங்கார பேரி முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்ற கோவிலாக திகழ்ந்து வருகின்றது. இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு சென்ற மாதம் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
48 நாள் மண்டல பூஜைகள் மிகவும் சிறப்பாக தினமும் நடைபெற்ற நிலையில் , சுற்றுப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். 48வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .மண்டல பூஜை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெற்றன. 48 நாட்களும் அம்மனுக்கு மிக விமரிசையாக அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை அனைத்தும் நடைபெற்றது. சிறப்பு ஹோமங்கள் 108 சங்கு பூஜைகள் , பல்வேறு வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடத்தப்பட்டது .
அதன் பின்னர் முத்தாரம்மன் சமேத ஞானமூர்த்தஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. மண்டல பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த விழாவினை இசக்கி அம்மாள் பரமசிவன் ஆகியோர் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தவர்.
Image source: dailythanthi.com