- திருநெல்வேலி முக்கூடல் பாப்பாக்குடி அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- பாறைகளை வெடிகள் வைத்து தகர்ப்பதால் வீடுகள் குலுங்குவதாக கூறி பொதுமக்கள் புகார்.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பாப்பாக்குடி அருகில் உள்ள அனைந்த நாடார் பட்டியில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது.
அந்த கல் குவாரியில் விதிகளை மீறி செயல்படுவதாகவும் , வெடிகள் வைத்து பாறைகளை உடைத்து தகர்ப்பதால் அருகில் உள்ள வீடுகள் பாதிக்கின்றது என்றும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த கல் குவாரி வெடிவைத்து பாறை தகர்ப்பால் வீடுகள் அனைத்தும் குலுங்குகின்றன. பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அனைந்த நாடார் பட்டி, பனையன்குறிச்சி , நாலாங் கட்டளை மற்றும் ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் கல்குவாரியை மூடக்கோரி பாப்பாங்குடி அருகே ஆலங்குளம் செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த அம்பாசமுத்திரம் தாசில்தார் ஆனந்த பிரகாஷ் மற்றும் பாப்பாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு சந்திரமோகன் மற்றும் போலீசார் அனைவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு சமாதானம் செய்யப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Image source: dailythanthi.com