நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர் . ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். ஆடி அமாவாசை திருவிழா முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பிருந்தே பக்தர்கள் வர தொடங்குவர்.
ஆடி அமாவாசை திருநாளில் நதியில் பக்தர்கள் நீராடுவர் . அன்றைய தினத்தில் காரையார் காணி குடியிருப்பு காட்சி தரும் மகாலிங்க சுவாமி சொரிமுத்து அய்யனார் சுவாமியை பூஜை அலங்காரத்துடன் தரிசனம் செய்தால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் விலகி மகிழ்ச்சிகரமான வாழ்வு நிலைக்கும் என்பது ஐதீகம். அதனால் ஆடி மாசம் என்றால் இந்த திருக்கோவிலில் அதிக பக்தர்கள் கூட்டம் அலைமோதும்
இந்த வருடமும் திருவிழாவில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று அரசு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்து இருந்தது.
நேற்று ஆடி அமாவாசை திருவிழா மிக சிறப்பாக கோலாகலமாய் நடைபெற்றது. மகாலிங்க சுவாமி சொரிமுத்து அய்யனார் ,பட்டவராயர் தூசி மாடசாமி, சங்கிலி பூதத்தார், பட்டவராயர் போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ,ஆராதனைகள் பூஜைகள் நடத்தப்பட்டது.
பக்தர்கள் புனித நீராடி பேச்சியம்மன் சன்னதி பட்டவராயர் சன்னதிக்கு முன்பாக மகிழ்ச்சியோடு பொங்கல் இட்டனர்.
கோமரத்தடிகள் சங்கிலிகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. தாமிரபரணி முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் காண்பதற்கு பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தது. மாலையில் பட்டவராயர், சங்கிலிபூதத்தார் சன்னதியின் முன்பாக பூக்குழி வைபவமும் நடைபெற்றது.
பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் பல பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தினர். அதனை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் போலீசார் பறிமுதல் செய்தனர் .
மாவட்ட நிர்வாகம் சார்பில் போக்குவரத்து துறை, தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை ,உள்ளாட்சித் துறை ,வனத்துறை ,மருத்துவத்துறை உள்ளிட்ட துறையினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கோவில் திருவிழா ஏற்பாடுகளை டி. என் .எஸ்.எம் சங்கராத்மஜன், கோவில் நிர்வாக அதிகாரி முருகன், ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.
நெல்லை மாவட்டம் மட்டுமன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து நிறைவோடு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Image source: dailythanthi.com