- சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கொடுக்கலாம் என்ற மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.
- இந்தத் திட்டம் பற்றிய விவரங்களுக்கு http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தம்முடைய செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்நாட்டில் முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர் , புத்தம், ஜெயின் மற்றும் பார்சி மதத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் கொடுக்கலாம்.
அரசு மற்றும் மாநில மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பள்ளிகளில் படிக்கும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்படும்.
பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்களுக்கும், தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்விக்கான உதவித்தொகையும் அளிக்கப்படும்.
இவர்கள் மத்திய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மாணவர்களின் பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை வரும் செப்டம்பர் மாதம் 30 தேதி வரை மற்றும் பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகைகளுக்கு அக்டோபர் 11ம் தேதி வரையில் இந்த இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் .
இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள் தங்களுடைய கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் குறிப்புகளை இணைத்து விண்ணப்பங்களை சரிபார்த்து கொள்ளவும்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் http://www.minorityaffairs.gov.in/schemes/ என்ற இணையதளத்தில் இதற்கான முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்.
மாணவர்களுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ள கல்வி உதவித் தொகையை உரிய காலத்தில் பெற்று கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.