செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் தொழில்குழு உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- ஊராட்சி தலைவர் சோமதுரை தலைமை தாங்கி விழாவினை நடத்தி வைத்தார்.
திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் ஊராட்சியில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் செயல்படும் சணல் பை தயாரிக்கும் தொழில் நிறுவனம் செயல் ஆற்றி வருகிறது.
நிறுவனத்தில் பணிபுரியும் தொழில் குழு உறுப்பினர்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் அக்குழு உறுப்பினர்கள் 15 பேருக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் சோமதுரை இயந்திரங்களை வழங்கி பேசினார் துணைத்தலைவர் குமரேசன், திட்டசெயல் தலைவர் மாரிமுத்து, பாலை வட்டார அணி தலைவர் அமித் வர்மா உட்பட பலர் பங்கேற்றனர்.