Logo of Tirunelveli Today

கூடங்குளம் முதல் அணு உலையில் 43,514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி

July 29, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments
செய்திக்குறிப்புகள்:

  • திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயக்குனர் மின் உலை செய்தி தகவலை வெளியிட்டுள்ளார்.
  • கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலையில் 43,514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு.

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குனர் பிரேம்குமார் தம்முடைய செய்தி குறிப்பில் அறிவித்துள்ளதாவது ;

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கி வருகிறது. அதில் முதல் அணு உலையில் இதுவரை 43, 514 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் தேதி முதல் கூடங்குளம் முதல் அணு உலையில், எரிபொருள் நிரப்பும் பணிக்காக, மின் உற்பத்தியானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

7,614 மில்லியன் யூனிட் மின்சாரம் இதுவரை கடந்த 326 நாட்களாக முதலாவது அணு உலையில் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது . முதலாவது அணு உலையில் 65 நாட்கள் எரிபொருள் நிரப்பும் பணிக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் நிரப்பும் பணியும் வழக்கம்போல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.

எரிபொருள் பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணி முடிவடைந்த பிறகு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்படும் . அதில் கிடைக்கின்ற ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும் .

முதல் அணு உலையில் 43,514 மில்லியன் யூனிட் மின்சாரமும் இரண்டாவது அணு உலையில் இருந்து இதுவரை 29,192 மில்லியன் யூனிட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்று இயக்குனர் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 21வது அணு உலையில் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்உலை முதலாவது அணுமின் நிலையம் ஆகும். மூன்றாம் தலைமுறைக்கான பாதுகாப்புடன் அமைக்கப்பட்டுள்ளது இந்த கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Image source: dailythanthi.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எம்மில் தேடுக
இன்றைய பதிவுகள்

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2024 Tirunelveli Today | All Rights Reserved. Powered by Digital SEO
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify