கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி, கொல்லங்கோடு, பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 51 பேரூராட்சிகளுக்கு நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் 3,500 காவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2,143 போ் குமரி மாவட்ட காவலர்களும், மதுரை மற்றும் தூத்துக்குடியை சார்ந்த ஏராளாமான காவலர்களும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 500 பேரும், 350 ஊர்க்காவல் படையினரும், 25 பேர் கொண்ட பறக்கும் படைக்குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.