செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டத்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
- தொடர் மழை காரணமாக பாபநாசம் அணை ஒரே நாளில் 9 அடியாக நீர்மட்டம் உயர்வு.
திருநெல்வேலி மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்வதால் பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடியாக உயர்ந்து இருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணி அளவில் தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது . மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து அணைகளுக்கு வருகிறது .
இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 75. 30 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் 84 அடி என உயர்ந்து இருக்கிறது. குடிநீருக்காக 1000 அடி கனநீர் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது .
சேர்வலாறு நீர்மட்டமும் ஒரே நாளில் 17அடி உயர்ந்துள்ளது . நேற்று முன் தினம் 100 அடி கணநீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. தொடர் மழையின் காரணமாக நேற்று நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 17.22 அடி உயர்ந்து 117.78 அடியாக உயர்ந்துவிட்டது .
நேற்று காலை பார்க்கும்போது மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 118 அடி இருந்தது. இப்பொழுது 199 கன அடியாக உயர்ந்திருக்கிறது..
நெல்லை தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் மழை முடிவடைந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு:
பாபநாசம் 15, சேர்வலாறு -6, மணிமுத்தாறு -7, அம்பை-4, பாளையங்கோட்டை 4, கலக்காடு -1, சேரன்மாதேவி -4 ,தென்காசி- 4, சிவகிரி -3, செங்கோட்டை-7, ஆய்க்குடி -2, குண்டாறு- 62, ராமநதி-6 கடனாநதி -18, கருப்பாதி - 12 , நெல்லை-5 என நெல்லை தென்காசி மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் பெய்த மழையின் மில்லி மீட்டர் கணக்கிடப்பட்டுள்ளது.
Image source: dailythanthi.com