நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள புகழ் பெற்ற அருள்மிகு ராஜகோபால ஸ்வாமி கோவிலில் ஜூலை 15 ஆ,ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பதின்மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக நடைபெற உள்ளது
காலை 6:30 மணி முதல் யாகசாலை பூஜைகள் சிறப்பு திருமஞ்சனம் பழமை வாய்ந்த இக்கோவில் வருஷா பிஷேகத்தை முன்னிட்டு நடைபெற உள்ளது. கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு மதியம் அன்னதானமும் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரட்டை கருட சேவை ராஜகோபால சுவாமி அழகிய மன்னார் என ஸ்ரீதேவி தாயார் அன்ன வாகனத்திலும், பூதேவி தாயார் கஜலட்சுமி வாகனத்திலும், கிருஷ்ண பகவான் தோளுக்கினியான் வாகனத்திலும் திருவிதியுலா இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
தெய்வீக ஸ்தலங்களுக்குச் சென்று வருஷாபிஷேகம் அபிஷேகங்களை தரிசனம் செய்தால் தெய்வீக அதிர்வலைகள் நம் ஆத்மாவின் உள் சென்று தீய சக்திகள் விலகி நல்ல சிந்தனை கிடைத்து நேர்வழி பாதையில் அழைத்துச் செல்லும் ஆற்றல் கிடைக்கின்றது. ஆதலால் அடிக்கடி ஆன்மீக சுற்றுலா பயணம் செல்லுங்கள் வாழ்க்கையில் அனைத்து பலனும் பலமும் பெற்று சிறப்பாக வாழுங்கள்.