செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சுகாதார விழிப்புணர்வு விழா நடைபெற்றது.
- என் குப்பை - என் பொறுப்பு என்ற தலைப்பில் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் சார்பில்' என் குப்பை - என் பொறுப்பு ' என்ற தலைப்பில் விழிப்புணர்வு விழா நடைபெற்றது
திருநெல்வேலி மாநகர நல அலுவலர்(பொ) அனிகுயின் ஆலோசனைப்படி , மாநகராட்சி ஆணைய சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி , மேலப்பாளையத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் மாசிலா தலைமையில், மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் ஐயப்பன் முன்னிலை வகிக்க இந்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது.
மாமன்ற உறுப்பினர் நித்திய பாலையா, பொது சுகாதார குழு தலைவர் ரம்ஜான் அலி , சுகாதார அலுவலர் ஷாகுல் ஹமீது , சுகாதார ஆய்வாளர் நடராஜர் மற்றும் அந்தோணி ஆகியோர் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்களால் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த சுகாதார விழிப்புணர்வு போட்டிகளில் வென்றவர்களுக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.
விழிப்புணர்வு சுகாதாரம் என்பது நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியத்துவமான கருத்து என்பதை உள் உணர்ந்து அனைவரும் அதனை பின்பற்ற வேண்டும் என்று திருநெல்வேலி டுடே வலியுறுத்திகின்றது.