திருநெல்வேலி காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு இன்று நடைபெறும் பத்திர தீப விழாவுக்காக நேற்று மாலை சுவாமி சன்னதி மணி மண்டபத்தில் தங்க விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. அணையா தீபமாக இன்று மாலை வரை சுடர் விடும் தங்கவிளக்கில் இருந்து இருந்து தீபம் எடுக்கப்பட்டு, மாலை சுமார் 6.00 மணிக்கு மேல் மாக்காளை (பெரிய நந்தி) முன்னர் மகா நந்தி தீபம் ஏற்றப்பட்டு, திருக்கோவில் வளாகம் முழுவதும் பத்தாயிரம் தீபங்கள் ஏற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளில் எழுந்தருளி தேர் வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்கள்.