பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி ஆகிய படிப்புகளுக்கு நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த மாதம் செப்டம்பர் 12-ந் தேதி நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான மருத்துவப்படிப்பு கலந்தாய்வு சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தென்காசி மாவட்டத்தில் அரசு பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு மருத்துவம் படிக்க இடம் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தென்காசி மாவட்டத்தில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ள மாணவிகள் பட்டியல்:
மாணவி லோகேஸ்வரி - திருச்சி மருத்துவக்கல்லூரி,
மாணவி சுபஸ்ரீ - ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி,
மாணவி ஐஸ்வர்யா - அரியலூர் மருத்துவக்கல்லூரி,
மாணவி பாத்திமா சைனியா - மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லூரி,
மாணவி சவுதா அப்ரைன் - தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சீதாதேவி - வடக்கன்குளம் ராஜா பல் மருத்துவக்கல்லூரி,
மாணவி ரேவதி - விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சங்கீதா - விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி மாலினி - திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி ஐஸ்வர்யா - சென்னை அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி முர்ஷிதா பானு - கரூர் அரசு மருத்துவக்கல்லூரி,
மாணவி சித்ராதேவி - கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி.