தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வந்ததால், மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்து நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. பெரும்பாலான மாணவர்களுக்கு கொரோனா முதல் அலை ஆரம்பித்ததில் இருந்தே ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், தமிழக அரசு தற்போது மாணவர்களின் நலனை கருதி நாளை முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நாளை பள்ளிகள் திறக்கப்போவதை முன்னிட்டு களக்காடு நகரில் உள்ள மீரானியா மேல்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி, கோமதி அருள்நெறி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் அவர்களின் உத்தரவின் பெயரில் வகுப்பறைகள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.