திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் - காந்திமதி அம்மை திருக்கோவிலில் நடைபெற்று வந்த தைப்பூச திருவிழாவில் நேற்று தெப்பத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று பகலில் பஞ்ச மூர்த்திகள் தெப்பக்குளக்கரை மீனாட்சி - சொக்கநாதர் கோவிலில் எழுந்தருள சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து இரவில் பஞ்ச மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை ஒன்பது சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்கள். இந்த விழாவில் திரளான பக்தர்கள் பங்குபெற்று சுவாமி தரிசனம் செய்தனர்.