தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள குறுகிய தெருக்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கிருமிநாசினி தெளிப்பதற்காக மாவட்ட சுகாதாரத்துறை சார்பாக 600 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கிருமிநாசினி தெளிப்பான் எந்திரம் விருதுநகர் நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை நேற்று விருதுநகர் நகராட்சி ஆணையர் செயல்படுத்தி தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர், நகர் நல அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த இயந்திரத்தின் மூலம் நகரில் உள்ள குறுகிய சந்துகளிலும் கிருமி நாசினி எளிதாக தெளிக்க முடியும் என நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.