செய்திக்குறிப்புகள்:
- தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட வ.உ. சி யின் புகைப்பட கண்காட்சி பஸ் நெல்லைக்கு வருகை.
- மக்களின் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார்.
"தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா" என பாரதமுழக்கமிட்டவர் வ உ சிதம்பரனார். ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பலை வாங்கி, வந்தே மாதரம் என கொடியை பறக்க விட்டு, புரட்சி செய்து அதனால் கோபத்திற்கு உள்ளாகி கடும் தண்டனையும் அனுபவித்த அவர் வாங்கிக் கொடுத்த சுதந்திர சுவாச மூசசு காற்றில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மாணவ கண்மணிகளுக்கு உணர்த்தவேண்டும் என்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றது.
இதனை மையமாக வைத்து பாளையங்கோட்டையில் வ உ சிதம்பரனார் 150வது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வ உ சி வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சி பஸ்ஸை கலெக்டர் விஷ்ணு கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .
சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்ஸில் நகரும் புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதலமைச்சர் மு க ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக முழுவதும் செல்வதற்காக அமைக்கப்பட்ட இந்த கண்காட்சி பஸ் நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளது.
வருகிற 3ஆம் தேதி வரை நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயா அருள்பதி மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம் , சேவியர் கல்லூரி முதல்வர் மரியதாஸ் , நல் நூலகர் முத்துகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் , மாணவ கண்மணிகள் கலந்து கொண்டனர்.
<p>Image source: dailythanthi.com</p>