- நெல்லையில் ஜமாபந்தி முறை ஜூன் மூன்றாம் தேதி துவக்கம்
- வருவாய்த்துறையினர் கிராமம் கிராமமாக சென்று ஆய்வு நடத்த ஆயத்தம்
இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் நடைமுறைப் படுத்தப்பட்டது தான் ஜமாபந்தி முறை. ஆண்டு தோறும் ஜூன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் கிராம கணக்குகள் குறித்த ஆய்வறிக்கை என்பதுதான் ஜமாபந்தி முறை.
நெல்லை மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் அதாவது ஜமாபந்தி வருகிற 3 ஆம் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார்..
நெல்லை தாலுகாவுக்கு ஜமாபந்தி அலுவலராக கலெக்டர் விஷ்ணு, பாளையங்கோட்டை தாலுகாவிற்கு நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகரன், ராதாபுரம் தாலுகாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நாங்குநேரீ தாலுகாவிற்கு சேரன்மகாதேவி உதவி கலெக்டர் ரிஷாப் மானூர் தாலுகாவிற்கு கலெக்டர் நேர்முக உதவியாளர் கணேஷ் குமார் அம்பை தாலுகாவிற்கு சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ் திசையன் விளை தாலுகாவிற்கு ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி, சேரன்மாதேவி தாலுகாவிற்கு வருவாய் நீதிமன்ற உதவி கலெக்டர் தமிழரசி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை தங்களது கிராமத்திற்கு ஒதுக்கப்பட்ட நாளில் ஜமாபந்தி அலுவலகம் சென்று கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் அங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று கலெக்டர் விஷ்ணு அறிவித்தார்.