- நெல்லை மாவட்டத்தில் மே மாதம் முழுவதும் நடைபெற்ற பிளஸ் -1 பிளஸ் -2 எஸ் எல்.சி பொதுத்தேர்வுகள் நேற்று முடிவடைந்தது.
- நினைவு பரிசுகள் வழங்கியும் பேனா மையை சட்டையில் தெளித்தும் மாணவ மாணவியர் கொண்டாட்டம்
பிளஸ் 1 பிளஸ் 2 எஸ் எல் சி பொது தேர்வுகள் மே மாதம் முழுவதும் நடைபெற்ற நிலையில் பிளஸ்-1 பொது தேர்வை 11, 902 மாணவிகள் 10, 831 மாணவர்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 733 பேர் எழுதினார்கள்.
' படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு - பாடம் படிக்காத மேதைகளும் ஆயிரம் உண்டு ' என்ற பாடல் அந்தக் காலத்தில் ஒலித்தாலும் படிப்பு இல்லையேல் வாழ்க்கை ஏது!
' படிப்புதான் நம் வாழ்வில் ஒளிமயமான ஆதாரம்' என்பதை இக்காலத்து குழந்தைகள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர். அதன்படி சிறப்பாக தேர்வு எழுதியதாக மாணவ மாணவியர் தெரிவித்தனர் . நேற்றோடு தேர்வு முடிவடைய மாணவ மாணவிகள் மகிழ்ச்சியோடு பள்ளியை விட்டு வெளியே வந்தனர் .
குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சியோ அலை போல் தெளிக்க, பேனாக்களின் மையோ பிள்ளைகளின் சட்டையில் நீல சாயமாய் தெளிக்க, நினைவு பரிசுகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ள… என பிள்ளைகளிடத்தில் ஒரே ஆர்ப்பாட்டம்.
நேற்று முன்தினம் எஸ் எஸ் எல் சி பொதுத்தேர்வு முடிந்த பிறகு பாளையங்கோட்டை பஸ் நிலையத்தில் மாணவர்களுக்கிடையே ஜாதி ரீதியில் பிரச்சனை எழுந்து மோதலில் முடிந்ததை நினைவில் கொண்டு ..
அதே சம்பவம் நடந்து விடாமல் இருக்க பாளையங்கோட்டை பஸ் நிலையம் முருகன் குறிச்சி ,. பள்ளிகூட வாசல் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை நியமிக்கப்பட்டனர்.
படிக்கும் பிள்ளைகள், வளரும் சூழ்நிலை இரண்டும் பெற்றவரும் பள்ளி நிர்வாகமும் தனி கவனம் கொண்டு சொல்லிக் கொடுத்தலின் மூலமாக இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்வோம்.
Image source: dailythanthi.com