செய்திக்குறிப்புகள்:
- நெல்லை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 8ஆம் தேதி நெல்லைக்கு வருகிறார்.
- மு க ஸ்டாலின் வருகையை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்வது பற்றி மேயர் சரவணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் வருகிற 8- 9 -2022 அன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நெல்லைக்கு வர இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மேயர் பி.எம் சரவணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றஆண
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பி எம் சரவணன் தலைமை தாங்கினார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது;
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்று திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்
.
அந்த வகையில் நெல்லைக்கு வருகிற எட்டாம் தேதி வியாழக்கிழமை வர இருக்கிறார். பாளையங்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு நெல்லை அரசுத்துறை வாரியாக முடிவடைந்த பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்க இருக்கிறார் மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் முடிக்க உள்ள பணிகளையும் திறந்து வைக்க இருக்கிறார்.
முதல்வர் வருகையொட்டி விழா நடைபெறும் மைதானத்தை சமன்படுத்துதல், சாலைகளை தூய்மைப்படுத்துதல் பணி, பொது மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் நடமாடும் கழிப்பறை வசதிகள் செய்து தருதல், தெருவிளக்குகள் சீராக இயங்குதல் என அனைத்து பணிகளும் கவனத்துடன் மேற்கொண்டு விழா சிறப்பாக நடைபெற மாநகர மாநகராட்சி சார்பாக செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் சிறப்பாக செய்ய வேண்டும். என்று மேயர் பி எம் சரவணன் தெரிவித்தார்
கூட்டத்தில் மாநகர செயற்பொறியாளர்கள் வாசுதேவன், பாஸ்கர், உதவி ஆணையாளர்கள் லெனின் பைஜூ, வெங்கட்ராமன் ராமசாமி மாநகர நல அலுவலர ஆனி குயின் சுகாதார அலுவலர்கள் இளங்கோ, ஷாகுல் ஹமீது, முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Image source: dailydhanthi.com