செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மத்திய அரசு சார்பில் தொழில்நுட்ப புதுமைகள் போட்டிகள் நடைபெற்றன.
- இந்த போட்டியில் பி எம் சத்திரத்தில் உள்ள ஜெயேந்திர சுவாமிகள் வித்ய கேந்திரா பி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
மத்திய அரசு சார்பில் நாடு எதிர்நோக்கும் சவால்களை கலைப்பதற்கான தொழில் நுட்ப புதுமைகள் குறித்த போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றது நெல்லை வி எம் சத்திரத்தில் உள்ள ஜெயேந்திர சுவாமிகள் திவ்ய கேந்திரா சி பி எஸ் பள்ளி மாணவர்கள் தொழில்நுட்ப புதுமைகள் போட்டியில் சிறப்பிடம் பெற்றனர்.
இந்தியா ஹேக்கத்தான் 2022 என்ற தலைப்பில் இந்த போட்டி நடைபெற்றது தமிழகத்தில் பல இடங்களில் இருந்து சிபிஎஸ்சி பள்ளி மாணவ மாணவிகள் தங்களது படைப்புகளை அளித்தனர்.
கிராமப்புற மேம்பாடு மற்றும் விவசாய உணவு தொழில்நுட்பம் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 13 பள்ளிகள் இறுதிச்சுற்று முன்னேறினார்கள். இந்த போட்டியில் திடக்கழிவுகளில் இருந்து நீரை சுத்தகரித்து விவசாயத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்த செயலாக்க திட்டம் வகுக்கப்பட்டது .
பி எம் சத்திரம் ஸ்ரீ ஜெயந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா சிபிஎஸ்சி பள்ளி மாணவிகள் பிஎஸ் அஸ்வினி, ஸ்ரீ ஹரிணி, கே கனிஷ்கா ஆகியோர் தங்களுடைய படைப்புகளை சமர்ப்பித்தனர் .
இறுதிப் போட்டியில் சிறந்த ஐந்து பள்ளிகளுக்கான பட்டியலில் பி எம் சத்திரம் பள்ளி முதலிடம் பெற்றது. இதையடுத்து மாணவி சிவகாமியின் நடைபெற்ற விழாவிற்கு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை ஜெயேந்திர கல்வி குழுமங்களில் தாளாளர் ஜெயேந்திரன் பி மணி முதல்வர் மற்றும் ஜெயந்தி ஆகியோர் பாராட்டினார்கள்.
Image source: dailydhanthi.com