- நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது.
- நேற்று இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் பயணிகள் மிகவும் மகிழ்ச்சியோடு பயணம் மேற்கொண்டனர்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள முருகனின் ஆறு தலங்களில் திருச்செந்தூர் இரண்டாவது தலம் எனும் புகழ்பெற்று தினமும் ஏராளமான பக்தர்களின் வருகை புரிகின்ற இடமாக திகழ்கின்றது. இந்த பழமையான மிக சிறப்பு வாய்ந்த திருக்கோவிலுக்கு பக்தர்கள் வசதியாக சென்று வருவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
திருநெல்வேலி கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு புதிதாக ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை 6.20 மணி , 7. 20 மணி , மாலை 6:45 மணி ஆகிய மூன்று நேரங்களிலும் நெல்லை சந்திப்பிலிருந்து திருச்செந்தூருக்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு மாலை 4.05 மணிக்கு சிறப்பு ரயில்கள் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், இதேபோல் திருச்செந்தூர் - நெல்லைக்கு காலை 10:15 மணிக்கும் மாலை 4:25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டு பயணிகள் இடையே மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்திருந்தது.
நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி, மாலை 6 .15 மணிக்கு சிறப்பு ரயில்களும் நெல்லை பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலிலும் இயக்கப்பட்டது அதேபோல செங்கோட்டையிலிருந்து நெல்லைக்கு காலை 6:40 மணி மாலை 5. 50 மணிக்கு சிறப்பு ரயில்களும் செங்கோட்டை வழியாக பாலக்காடு நெல்லை எக்ஸ்பிரஸ் செல்லும் இயக்கப்பட்டு வருகிறது
நேற்று முதல் கூடுதலாக நெல்லையிலிருந்து செங்கோட்டைக்கு காலை 9.10 மணிக்கு மதியம் 1:50 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது பயணிகள் இடையே மகிழ்ச்சியூட்டும் விதமாக அமைந்திருந்தது.