- நெல்லை விகேபுரம் விக்ரம சிங்கபுரம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
- எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் நகரங்களின் தூய்மைக்கான இயக்கத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஒரு லட்சியத்தை நோக்கி அழகாக பயணிக்க கூடிய பாதையில் உறுதிமொழி என்பது எடுத்தால்தான் ஒவ்வொருவரும் சாதித்து ஜெயிக்க முடியும் . வாழ்க்கைக்காக இருந்தாலும் நாட்டுக்காக இருந்தாலும் அனைத்து விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்கபுரம் ஆண்ட்ரூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாபநாசம் தொழிலாளர் நலச்சங்க மேல்நிலைபள்ளிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தூய்மை உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விகேபுரம் விக்ரம சிங்கபுரம் நகராட்சி சார்பில் பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
எனது குப்பை எனது பொறுப்பு மற்றும் நகரங்களின் தூய்மைக்கான இயக்கத்தினகீழ் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது
நகரமன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள் தலைமை வகிக்க..
நகராட்சி ஆணையர் கண்மணி முன்னிலை வகித்தார் .
வீடுகளில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து வழங்குவது பற்றி சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜன் எடுத்துரைத்தார் . நிகழ்ச்சியில் பள்ளி அலுவலர் பணியாளர்கள் நகராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் துணிவு ,தைரியம் , தன்னம்பிக்கை ,முயற்சி ,அறிவு , ஆற்றல் அனைத்தும் உள்ளடக்கிய இளமைப்பருவம் வீணே என விழுந்து விடாது ..காலத்தில் பயிர் செய் எனும் பிடியை உறுதியாய் பிடித்து வாழ்விற்கு தேவையான பல உறுதிமொழிகள் எடுத்து வெற்றி காணுங்கள் என இளைய சமுதாயத்திற்கு திருநெல்வேலி டுடே தன் சார்பாக கருத்தை வெளியிடுகின்றது.