திருநெல்வேலியில் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தில் கடந்த 24ஆம் தேதி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோவிலில் 93 ஆவது ஆனி திருவிழா வெகு விமரிசையாக கொடிஏற்றத்துடன் தொடங்கியது.
கண்ணனாக , வைகுண்ட வாசனாக சீனிவாசனாக , மாதவனாக கோவிந்தனாக ஆக பல காட்சிகள் தருபவன் எம்பெருமான் நாராயணன்.
கண்ணன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமல்ல .. நம் அனைவருக்கும் சொந்தமானவன் . நம் குறையை தீர்த்து அருள்பவன் என்பதை உலகுக்கு அருள்கின்றான் என்பதை உணர்த்தும் வகையில் அடிக்கடி பல்வேறு திருவிழாக்கள் கோவிலில் நடந்து கொண்டு இருக்கின்றன.
அப்படி சிறப்பாக நடைபெற்ற இந்த விழாவில் 8ஆம் நாளான நேற்று பரிவேட்டை விழா நிகழ்ச்சி நடந்தது. .அதையொட்டி மாலையில் நாராயணஸ்வாமிக்கு சிறப்பு பள்ளியறை அலங்காரமும் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஊருக்கு மேற்கே உள்ள காலங்கரை ஆட்சியில் இறங்கி பரிவேட்டையாடும் ஐதீகமான கலாச்சார பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமியை தரிசனம் செய்தனர் . திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சனயான தேரோட்டம் வருகின்ற 4-ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறுகின்றது . விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் செய்து வருகின்றனர்.
Image source: dailythanthi.com